கூலி திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்க …காரணம் என்ன’?
இந்த ஆண்டு வெளியாகும் பல படங்களில், ரஜினிகாந்தின் கூலி மற்றும் ஹிருத்திக் ரோஷனின் வார் 2 ஆகியவை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இரண்டு படங்களாகும். இரண்டு படங்களும் வெவ்வேறு திரைப்படத் துறைகளைச் சேர்ந்த இரண்டு சூப்பர் ஸ்டார்களால் நடிக்க பட்ட படங்கள்,. இரண்டு படங்களும் இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போது திட்டங்களில் சில மாற்றங்கள் இருப்பதாகத் தெரிகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி, ரசிகர்களிடையே குறிப்பிடத்தக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது., 2019 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஆன வார் படத்தின் தொடர்ச்சியான வார் 2, படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார், ஜூனியர் என்டிஆருடன் ரித்திக் ரோஷன் நடிக்கும் அதிரடி thriller திரைபடம். கூலி மற்றும் வார் 2 ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் நேருக்கு நேர் மோதக்கூடும் என்று எதிர்பார்க்க பட்டது ஆனால் இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் தனித்தனி தேதிகளில் வெளியிட தற்போது உடன்பட்டிருக்கின்றனர். ஆகஸ்ட் 2025 சுதந்திர தின வார இறுதியில் ‘வார் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், கூலி திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது’. கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் promotion…னில் பிஸியாக இருக்கிறார் லோகேஷ் . இப்படத்தின் மேக்கிங் வீடியோ..வை பட குழு வெளியிட்டு இருக்கிறது.