சினிமா என்ன உங்க சொத்தா? கீர்த்தி சுரேஷின் தந்தையை விளாசிய Jailer பட வில்லன்
நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமாரின் சமீபத்திய கருத்துக்களுக்கு நடிகர் விநாயகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மலையாள திரையுலகில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பிரமுகரும், பிரபல தயாரிப்பாளரும் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையும்மான சுரேஷ் குமார், சமீபத்தில் அளித்த பேட்டி கேரளாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மலையாள திரை உலகை பொருத்தவரை பல தயாரிப்பாளர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எந்த தயாரிப்பாளரும் எந்த வகையிலும் படம் எடுக்க முடியாத சூழ்நிலையில் தற்போது மலையாள சினிமா உள்ளது. நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நட்சத்திரங்கள் சம்பளம் வாங்குகிறார்கள்.
நட்சத்திரங்கள் சம்பளத்தைக் குறைக்காமல் நாங்கள் முன்னேற முடியாது, 100 கோடி Budget…டில் தங்கள் படங்கள் நுழைவதைப் பற்றி பெருமையாக பேசுவது தயாரிப்பாளர்கள் அல்ல நடிகர்கள் தான், இவரின் கருத்துக்கு Jailer பட வில்லன் விநாயகன் பதிலடி கொடுத்துள்ளார்.
சினிமா என்ன உங்கள் குடும்ப சொத்தா நீங்கள் முதலில் உங்கள் மனைவி மற்றும் மகளிடம் சொல்லி திரைப்படங்கலில் நடிப்பதை நிறுத்த சொல்லுங்கள் நான் ஒரு நடிகர் நான் விரும்பினால் திரைப்படத்தில் நடிப்பதை தவிர படத்தை இயக்கவும் தயாரிக்கவும் முடியும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இவரின் கருத்தை பலரும் ஆமோதித்து வருகின்றனர்.