மகாவிஷ்ணு ஆற்றியது ஆன்மீக சொற்பொழிவு அல்ல அது சனாதன சொற்பொழிவு. மகாவிஷ்ணு தன்னைத் தானே கடவுள் என கூறிக் கொள்கிறார். – 70 வயது முதியவர் அவரது காலில் விழுகிறார். இதுதான் ஆன்மீகமா.? அது சனாதனம்.! – துரைவைகோ பேட்டி.
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண ஒன்றிய அரசு தீர்க்கமான முடிவுகளை எடுத்து இலங்கை அரசை பணிய வைக்க வேண்டும். – துரைவைக்கோ பேட்டி.
கடந்த மாதம் சென்னையில் மதிமுக பொதுக்குழு உறுப்பினர் கூட்டம் முடித்து விட்டு மதுரை திரும்பி வந்து கொண்டிருந்த பச்சமுத்து, அமிர்தராஜ், புலி சேகர் ஆகியோர் வந்த வாகனம் மதுரை அருகே மேலூர் சாலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த நிலையில், அண்மையில் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிலையில், இன்று மதுரை முனிச்சாலை பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை சந்தித்து துரைவைகோ 45-லட்ச ரூபாய் நிதி வழங்கினார்.
நிதி வழங்கும் விழாவில் மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ பேசி வருகிறார்.
இந்த மூன்று மரணங்களும் தவிர்க்க படவேண்டியது., இவர்கள் இறக்க வேண்டியவர்கள் அல்ல.
தொண்டர்ப்படையினர் எல்லோரையும் உணவு வழங்கிய பிறகு தான் மிச்சம் மீதியை உண்பார்கள். மற்றவர்களை சாப்பிட வைத்து அழகு பார்ப்பார்கள். 8 மணி நேரம் 12 மணிநேரம் எந்த கூட்டம் நடத்தினாலும் நிற்பவர்கள் தொண்டர்ப்படையினர்.
மதிமுக தொண்டர்ப்படையினரில் இருப்பவர்கள் பத்திரமாத்த தங்கம்.
தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதனுக்கு மற்றொரு மகன்கள் தான் இந்த மூன்று பேரும் இருந்தார்கள். இவர்கள் இறப்பு மிகப்பெரிய இழப்பு.
எங்கள் இயக்கத்திற்கு வாக்கு வங்கி குறைவுதான், எண்ணிக்கையில் குறைவுதான். ஆனால் ஒரு தொண்டருக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒரு குடும்பமாக இணைந்து நிற்போம்.
தமிழ்நாட்டில் மாறுதட்டு சொல்லுவோம் எங்கள் இயக்கத்திற்கு நிகர் வேறு எந்த இயக்கமும் இல்லை. சுயமரியாதை, தன்மானம் உள்ள ஒரே இயக்கம் அதுவும் குடும்ப உறவுகளாக இருக்கின்ற இயக்கம் மதிமுக தான்.
தமிழ்நாட்டில் இன்றைக்கு நாம் ஜாதியால், மதத்தால் வேறுபட்டு இருக்கிறோம். மதிமுகவை பொறுத்த வரை நான் மதிமுக காரன் அந்த ஒரு ஜாதி தான்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரைவைக்கோ கூறுகையில்.
ஆளுநரை பொறுத்தவரை தமிழ்நாட்டின் ஆளுநராக செயல்படாமல் RSS போன்ற பிரிவினை சக்திகளின் பிரச்சாரராக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு பள்ளிக்கல்வியின் செயல்பாடுகளை பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார். அது முற்றிலும் தவறானது, CBSC சிலபஸ்க்கு இணையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நமது பள்ளிக்கல்வி துறையில் படித்தவர் தான் இன்றைக்கு இஸ்ரோ, மருத்துவம் ஆகியவற்றில் முதன்மையானவர்கள் விளங்குகிறார்கள். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சரியில்லை.? தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு என ஒரு தவறான கருத்தை ஊடகங்கள் வாயிலாக ஆளுநர் பதிவிடுகிறார். ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றது முதல் தமிழக அரசுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்.
மகாவிஷ்ணு ஆற்றியது ஆன்மீக சொற்பொழிவு அல்ல அது சனாதன சொற்பொழிவு, ஆன்மீக சொற்பொழிவு என்னைப் பொருத்தவரை நல்லது தான். ஆனால் அது ஆன்மீக சொற்பொழிவு கிடையாது சனாதன சொற்பொழிவு இந்து மதத்தை வைத்து பிழைப்பு நடத்துவது.
மகாவிஷ்ணு தன்னைத் தானே கடவுள் என கூறிக் கொள்கிறார் 70 வயது முதியவர் அவரது காலில் விழுகிறார். இதுதான் ஆன்மீகமா.? அது சனாதனம்.! மந்திரம் ஓதினால் மேல இருந்து அக்னி வரும் மந்திரம் ஓதினால் இங்கிருந்து அங்கு பறந்து செல்லலாம் இதுதான் பள்ளி மாணவர்களிடம் பேசக்கூடிய பேச்சா.? இதுதான் சனாதன பேச்சு.
இந்து மதம் வேறு சனாதனம் என்பது வேறு இந்து மதத்தை நாங்கள் வெறுக்கவில்லை எதிர்க்கவில்லை சனாதனத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை. உடன்கட்டை ஏறுவது பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பது பள்ளிக்கு சென்று படிக்க கூடாது என்று சொல்வது இதுதான் சனாதனம். மூடநம்பிக்கைகளை சனாதனத்தில் இருக்கிறது இதுபோன்ற தவறான சித்தாந்தங்கள் மூடநம்பிக்கைகளை பரப்புபவர்கள் சனாதன சொற்பொழிவாளர்கள் என்கிறோம் இதுபோன்ற சனாதன சொற்பொழிவு தான் அன்று மகாவிஷ்ணு பேசியுள்ளார். அவர் மகாவிஷ்ணு கிடையாது., மகா பொய்க்காரர்.
தமிழகம் மீனவர்கள் சிறை பிடிப்பது தமிழக முதல்வர் அதற்கு கடிதம் எழுதுவது எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் குரல் கொடுப்பது போராட்டம் நடத்துவது தொடர் கதையாகி உள்ளது இதற்கு நிரந்தர தீர்வு மத்திய அரசின் கையில் தான் உள்ளது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக குரல் கொடுத்தேன். தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக சிறை பிடித்து வருகின்றனர் இந்த ஆண்டு வாரத்திற்கு ஒருமுறை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் 22 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதில் 12 மீனவர்கள் விடுவிக்கப்பட 98 லட்சம் கொடுத்தால் தான் மீனவர்களை விடுவோம் என இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர் அவ்வளவு பணத்திற்கு அவர் எங்கு செல்வார்.? தமிழக மீனவர்கள் தங்கம் கடத்துகிறார்கள் போதைப்பொருள் ஏதும் கடத்துகிறார்கள் மூன்று வேளை சாப்பாட்டிற்காக கடல் கடந்து போரார்கள். வீட்டில் அடுப்பு எரிய வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் கடலுக்கு செல்ல வேண்டும் கடலுக்கு சென்றாள் உயிருடன் திரும்புவது நிச்சயம் இல்லை என தெரிந்தும் உணவுக்காக செல்கிறார்கள். தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கா தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய குடிமக்கள் தானா.? என மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினேன். இதற்கு நிரந்தர தீர்வு காண ஒன்றிய அரசு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் இலங்கை அரசை பணிய வைக்க வேண்டும்.
நடிகர் விஜய் சினிமா உலகில் ஜொலிக்கும் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். அவரை இளைஞர் முதல் அனைவரும் விரும்புகிறார்கள் தமிழ்நாட்டிற்கு ஒரு நல்லது நடந்தால் நிச்சயம் சந்தோசம் தான் மதிமுக சந்தோசம் அடையும், அவர் கட்சிக்கொடி அறிமுக விழாவில் சமூக நீதியும் மதச்சார்பின்மையும் பற்றி கூறியிருக்கிறார். அன்றைய தினமே அதனை வரவேற்கிறோம். அவர் நல்லது நினைக்கலாம் ஆனால் நடைமுறை அரசியலில், நான் 4 ஆண்டுகள் அரசியலில் இருக்கிறேன். அவ்வளவு கஷ்டங்கள் துயரங்கள் பிரச்சனைகள் நடைமுறை அரசியலில் உள்ளது இதையெல்லாம் கடந்து மாநாட்டு தன்னுடைய கட்சியின் நிலைப்பாட்டை கொள்கையை விரிவாக கூறுகிறேன் என சொல்லி இருக்கிறார் நல்லபடியாக கூறுவார் என எதிர்பார்க்கிறேன்.