in

நெல்லையில் பள்ளி வளாகத்துக்கு உள்ளே இருசக்கர வாகனத்தில் வீலிங்


Watch – YouTube Click

நெல்லையில் பள்ளி வளாகத்துக்கு உள்ளே இருசக்கர வாகனத்தில் வீலிங்

 

நெல்லையில் பள்ளி வளாகத்துக்கு உள்ளே இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த மாணவர்கள் சிறைப்பிடித்த பள்ளி நிர்வாகம் விரைந்து வந்த காவல்துறையினர் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மாலை 4 மணி அளவில் திடீரென பள்ளிக்குள் பத்துக்கு மேற்பட்ட ஒன்பது மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் நுழைந்து அதிக சத்தத்துடன் வீலிங் செய்து அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை எதிர்பாராத விதமாக வந்து அதிவேக சத்தத்தால் பயந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளியின் காவலர் விரைந்து வந்து வெளிப்பக்கமாக கதவை பூட்டி விட்டார். இதனால் உள்ளே இருந்த மாணவர்கள் வெளியே வர முடியாத ஒரு நிலை ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக மேலப்பாளையம் காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த மேலப்பாளையம் காவல்துறையினர் மாணவர்கள் அனைவரையும் லாகாவமாக பிடித்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து மாணவர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பு மட்டும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களாக இருப்பதினால் அவர்கள் அனைவரிடமும் இதுபோல் தவறு செய்ய மாட்டோம் என்று எழுதி வாங்கிவிட்டு இருசக்க வாகனத்தை மட்டும் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 18 வயதிற்கு கீழ் இருக்கும் மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது குற்றம் என்று இருக்கும் நிலையில் இருசக்கர வாகனத்தில் அதிக வேகத்துடன் அதுவும் பள்ளிக்குள் புகுந்து வீலிங் செய்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

காவல்துறையினர் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

கரூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் வாயில் கருப்பு துணி கட்டி, கருப்பு சட்டை அணிந்து பங்கேற்பு

சூரிய மின்சக்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்