இந்திய வரைபடத்தில் திராவிட நாடு எங்கே இருக்கிறது கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு மதுரையில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டர்
சமீபத்தில் சென்னையில் தமிழக ஆளுநர் பங்கு பெற்ற நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில் தற்போது மதுரை பாஜகவினர் போஸ்டர் ஒட்டியது பேசு பொருளாகியுள்ளது.
அவர்கள் ஒட்டி உள்ள போஸ்டரில் இந்தியாவில் இந்தியனாகவும் தமிழகத்தில் தமிழனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு எதற்கு திராவிட நாடு மக்களே ஓட்டு வங்கி அரசியலுக்காக இல்லாமல் உணர்வில் இந்தியனாகவும் இனத்தில் தமிழனாகவும் வாழ்வோம் என்றும் இந்திய வரைபடத்தை சுட்டிக்காட்டி இதில் திராவிட நாடு எங்கு இருக்கிறது கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு.