in

பல் உடைத்த விவகாரத்தில் பல்வீர்சிங்கை பாதுகாக்கும் நபர்கள் யார்?


Watch – YouTube Click

பல் உடைத்த விவகாரத்தில் பல்வீர்சிங்கை பாதுகாக்கும் நபர்கள் யார்?

 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பிரிவில் உள்ள அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்வதாக எழுந்த புகாரில் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் உள்பட காவல்துறையினர் 14 பேர் மீது சிபிசிஐடி போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா உயர்மட்ட விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். புகாருக்குள்ளான ஏஎஸ்பி சஸ்பென்ட் செய்யப்பட்டு சமீபத்தில் அவரது சஸ்பென்ட் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று நெல்லையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் வழக்கறிஞர் ஹென்றி தீபன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், பல்விர் சிங் ஒரு குற்றவாளியாக நீதிமன்றத்தில் இன்று நிற்கிறார் முழுமையான நீதி இன்னும் கிடைக்கவில்லை முழுமையாக கிடைக்கும் வழியை நோக்கி பயணிக்கவில்லை

அமுதா IAS முழு அறிக்கை வேண்டும் என கேட்டோம் கொடுக்கவில்லை முதல் கட்ட அறிக்கை நீதிமன்றத்திற்கு சென்று நீதிமன்றம் கொடுக்க வேண்டும் என வழக்கு தொடுத்தோம் தாமதமாக முதல் கட்ட அறிக்கை புகார்தாரின் தாயிடம் நேரில் வந்து கொடுத்து இருக்கிறார்கள் அறிக்கை கொடுக்கக் கூடாது என்று தடுக்கிறார்களா என்று தெரியவில்லை

அமுதா ஐஏஎஸ் முழு அறிக்கை கொடுக்க வேண்டும் தற்போது உள்துறை செயலாளராக இருக்கும் அமுதா முழுமையான அறிக்கை கொடுக்க வேண்டும்

உங்கள் அறிக்கையை நீங்கள் வெளிப்படுத்துங்கள் அல்லது உங்களை தடுப்பது யார் என தகவலை வெளிப்படுத்துங்கள் சேரன்மகாதேவி சப் கலெக்டர் அளித்த அறிக்கை உட்பட அறிக்கைகள் இன்னும் வெளியிடவில்லை

முழுமையான அறிக்கை கிடைத்த பிறகு தான் சிபிசிஐடி பதிவு செய்த வழக்கு சரியா என்ற விவரம் தெரியவரும் சிறுவர் ஒருவன் பாதிக்கப்பட்ட அவன் எஸ்சி பிரிவை சேர்ந்தவர் இருப்பினும் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் மாற்று சமூகத்தை சேர்ந்தவராக இருந்தும் அவர்கள் மீது எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யவில்லை

பல்விர் சிங் மற்றும் மற்ற மூன்று காவலர்கள் எஸ்சி எஸ்டி சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வழக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளனர்.

சாத்தான்குளம் வழக்கு போல் இந்த வழக்கிலும் மருத்துவர் மீது எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை பல் பிடிக்கப்பட்ட விவகாரத்தில் அமுதா அறிக்கைகள் மருத்துவ ஜெய்சங்கர் காயங்களை முறையாக பதிவு செய்யவில்லை என கூறி உள்ளார்.

இளையராஜா மற்றும் ஜெய்சங்கர் இருவரும் காயங்களை குறிப்பிடாமல் அனுப்பி உள்ளனர். அவர்களை இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும்

இந்த வழக்கில் மேல்விசாரணை துவங்க வேண்டும் அவர்களாக தானாக முன்வந்து அறிக்கை கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

மேலும் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் காட்சிகள் தற்போது வரை கொடுக்கவில்லை. தென் மண்டல புதிய ஐஜி கண்ணன் மற்றும் சிபிசிஐடி காவல்துறை அளித்துள்ள விவரத்தில் இருவரும் முரண்பாடான தகவலை தெரிவித்து வருகிறார்கள்.

அரசு அதிகாரிகள் எந்த பணி செய்தாலும் அது திருட்டுத்தனமாக இருக்கக் கூடாது என்பதுதான் உச்ச நீதிமன்றம் கூறுகிறது. அமுதா ஐ ஏ எஸ் அறிக்கையை அரசு கொடுக்க வேண்டும் என கேட்டு இருக்கிறோம் இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

தேர்தல் பத்திர முறை ரத்து

கத்தார் பிரதமருடன் மோடி சந்திப்பு