யார் அந்த சார் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் வீட்டில்இருசக்கர வாகனங்களில் ஸ்டிக்கர்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு சம்பந்தமாக எதிர்க்கட்சியினர் பல்வேறு விதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்திலும் யார் அந்த சார் என எழுதிய சட்டைகளை அணிந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
எதிர்நிலையில் அதிக மாநில இளைஞர்,இளம் பெண்கள் பாசறை சார்பாக அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள்,எம் பிகள் முன்னாள் எம்எல்ஏக்கள்,எம்பிகள் விடுகளிலும், கார்களிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வீட்டில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் தலைமையில் ஸ்டிக்கரை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கட்சி நிர்வாகிகளின் இருசக்கர வாகனங்களிலும் ஸ்டிக்கர் ஒட்டினார்.