சூப்பர் ஸ்டார்…ரா யாரு அவரு
நயன்தாரா, சமீபத்தில் தனது திரையுலக பயணத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார். நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார்.
தி ஹாலிவுட் ரிப்போர்ட்டருக்கு அளித்த பேட்டியின் போது, மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘மணிசித்திரத்தாழ்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘சந்திரமுகி’ படப்பிடிப்பில் நடித்த அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.
முதல் காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த போது அவரின் புகழ் எனக்கு தெரியாது’ முதல் சந்திப்பின் போது ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார் என்றும் உலகம் முழுக்க அவருக்கு ரசிகர்கள்…உண்டு…ன்னு எனக்கு தெரியாது.
அதனால் தான் நிம்மதியாக அவருடன் என்னால் பயம் இல்லாமல் நடிக்க முடிந்தது என்று நயன்தாரா கூற என்னடா இது உலக மகா பொய்யா இருக்குது.
ரஜினி நடிச்ச முத்து படம் ஜப்பானில் செம போடு போட்டது ஜப்பான் மக்களுக்கே தலைவரை பற்றி தெரியும் போது பக்கத்து ஊர்ல இருக்குற உங்களுக்கு ரஜினிகாந்த் பத்தி தெரியாதா…இன்னு நயன்தாராவை ரசிகர்கள் ட்ரோல் பண்ணி கலாய்க்க, ஒவ்வொரு விஷயத்தையும் Wanted..டா…க சொல்லி நயன்தாரா செம்மையா எல்லார்கிட்டையும் வாங்கி கட்டிட்டி..இட்டு இருக்கார்.