யாருக்கு வேண்டும் அவர்கள் ஆஸ்கார் விருது
கங்கனா ஃபேஷன், குயின், தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் மற்றும் மணிகர்ணிகா ஆகிய படங்களில் நடித்ததற்காக ஏற்கனவே நான்கு முறை தேசிய விருதுகளை வென்றிருகிறார். கங்கனா ரனாவத்தின் இயக்கி நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் பிரீமியர் செய்யப்பட்டது. ott பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை, ரசிகர்களின் பாராட்டைப் பெற நடிகை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் உரையாற்றினார்.
வளையவாசி ஒருவர் இந்தப் படம் இந்தியாவின் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கூற “ஆனால் அமெரிக்கா அதன் உண்மையான முகத்தை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை, வளரும் நாடுகளை அவர்கள் எவ்வாறு கொடுமைப்படுத்துகிறார்கள், அடக்குகிறார்கள் என்பதை #எமர்ஜென்சியில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களின் முட்டாள்தனமான ஆஸ்கார் விருது யாரூக்கு வேண்டும் அவர்களே வைத்து கொள்ளட்டும் . எங்களிடம் நிறைய தேசிய விருதுகள் உள்ளன.” என்று பதிலளித்துள்ளார்