in

யாருக்கு வாக்களிக்க வேண்டும்.”மாவட்ட ஆட்சியரிடம் அப்பாவித்தனமாக கேட்ட நரிக்குறவர்கள்


Watch – YouTube Click

யாருக்கு வாக்களிக்க வேண்டும்.”மாவட்ட ஆட்சியரிடம் அப்பாவித்தனமாக கேட்ட நரிக்குறவர்கள்

 

புதுச்சேரியில் 100% வாக்குப்பதிவை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மாவட்ட தேர்தல் துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

எந்தெந்த பகுதியில் வாக்குப்பதிவு குறைவாக இருந்ததோ அந்த இடங்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேரடியாக சென்று மக்களை சந்தித்து 100% வாக்குப்பதிவு அளிக்க வலியுறுத்தி வருகிறார்.

அந்த வகையில் லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனி பகுதிக்கு இன்று சென்ற அவர், நரிக்குறவர் காலணியில் உள்ள வாக்காளர்களை அழைத்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அப்போது நரிக்குறவர்கள் தங்களது பகுதியில் ஏராளமான அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளதை குறிப்பிட்டனர்.

சுகாதாரமற்ற குடிநீர், தரமற்ற வீடு, கொசு தொல்லை, ரேஷன் கார்டு இல்லை, 20க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடு இல்லை மின்விளக்கு வசதி இல்லை என பல்வேறு புகார்களை கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தனர்.

அப்பொழுது மாவட்ட ஆட்சியர்,” இது தேர்தல் நேரம் என்பதால் தான் எந்த வாக்குறுதியும் கொடுக்க முடியாது..தேர்தல் முடிந்த பிறகு தன்னை வந்து சந்திக்குமாறும் அல்லது தானே நேரில் வந்து கோரிக்கைகளை கேட்டு சரி செய்வதாக உறுதி அளித்தார்.

அப்போது கூடியிருந்த நரிக்குறவர்கள், ஒவ்வொரு முறையும் ஓட்டு கேட்க வரும் போது கோரிக்கை நிறைவேற்றதாக பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால் எதுவும் செய்வதில்லை. அதனால் யார் செய்வார்கள் என கூறுங்கள். அவர்களுக்கு நாங்கள் ஓட்டளிப்போம் என்றனர். இதற்கு மாவட்ட ஆட்சியர், அதையெல்லாம் நான் கூற முடியாது.

தேர்தலில் ஜனநாயக முறையில் நீங்கள் 100% சதவீதம் வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டார்…


Watch – YouTube Click

What do you think?

இன்று ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் பிரசாரம்

சிதம்பரம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரம்