என் மகளை ஏன் இப்படி கேவலபடுத்துறிங்க …. கண்ணீருடன் அர்ச்சனா
பிரபல தொகுப்பாளினி விஜே அர்ச்சனா மட்டும் அல்ல அவருடைய மகளும் தற்போது பல சின்னதிரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தன் மகள் சாராபற்றிய அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளிட்டுள்ளார். அச்சம்பவம் குறித்து கண்ணிருடன் அவர் கூறியதாவது.
எனக்கும் சாராவுக்கும் அடிக்கடி சண்டை வரும், இப்போ கூட இது சமந்தமாக அவளிடம் சண்டை போட்டுட்டு வரேன்.
சமீபத்தில் அவள் நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தில் சாராவுடன் ஒரு பொண்ணும் இரண்டு பையன்களும் இருந்தார்கள். ஆனால் கூட படிக்கும் மாணவன் ஒருவர், சாராவும் ஒரு பையனும் ஒண்ணா இருப்பது போல் கிராப் செய்து இவர்கள் Lovers என்று குறிப்பிட்டு இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்திருக்கிறார்.
அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது. நான் சாராவை குறித்து மட்டும் யோசிக்கவில்லை. அந்த பையனை பற்றியும் அவனுடைய வாழ்க்கை பற்றியும் கவலைபடுகிறேன் என்று அர்ச்சனா கண்ணீருடன் கூறினார்.
நீ எந்த விதமான உலகத்தை பார்க்க விரும்புகிறாயோ அதுபோலவே நீ மாறு என்று மகாத்மா சொல்லிருகிறார்.