in

சிறுவனை பார்க்கும் திட்டத்தை அல்லு அர்ஜுன் ஏன் கைவிட்டார்

சிறுவனை பார்க்கும் திட்டத்தை அல்லு அர்ஜுன் ஏன் கைவிட்டார்

 

காவல் நிலையம்…. அல்லு அர்ஜுன் வருகையால் பரபரப்பு
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படத்தின் பிரீமியர் ஷோ… வில் உயிரிழந்த ரேவதி தற்போது வரை சிகிச்சையில் இருக்கும் அவரது மகன் சம்பந்தப்பட்ட வழக்கில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது ஹைதராபாத் போலீஸ்.

கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியதால் சிறையில் இருந்து விடுக்கப்பட்டவர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் மேலும் கோர்ட்டின் அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது கோர்ட் முறைகளை அவர் முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, நடிகர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இரண்டு மாதங்களுக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும்.,

சிக்கட்பள்ளி காவல் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்த போதிலும் நேற்று அல்லு அர்ஜுன் காவல் நிலையத்துக்கு வந்ததால் சிறு பரப்பரப்பு ஏற்பட்டது.

மேலும் தற்போது சிகிச்சையில் இருக்கும் சிறுவனை பார்க்க அல்லு அர்ஜுன் திட்டமிட்டு இருந்தார். அவர் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது அங்கு மீடியாக்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் கூட கூடாது நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படையாமல் அவர்களுக்கு ஒரு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய போலீஸ் மற்றும் மருத்துவமனை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

இதனால் மருத்துவமனைக்கு சென்று சிறுவனை பார்க்கும் திட்டத்தை அல்லு அர்ஜுன் கைவிட்டார்.

What do you think?

தர்ஷா குப்தா… ரீ-என்ட்ரி..… Cup… பை உடைக்க மறுத்த மஞ்சரி

நீலாம்பரி ஆட்டம் ஆரம்பம்