in

முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாதது ஏன்? பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மயிலாடுதுறையில் பேட்டி

திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு கேலிக்கூத்தானது, கருணாநிதியின் குடும்ப சொத்தாக திமுக மாறி நீண்ட காலம் ஆகிவிட்டது, தனக்குப் பிறகு முதலமைச்சர் பதவிக்கு வர தனது மகனுக்கு பிரச்சனை இருக்கக் கூடாது என்பதற்காக துணை முதல்வர் பதவி வழங்க தயாராகிறார் முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாதது ஏன்? பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மயிலாடுதுறையில் பேட்டி

மயிலாடுதுறைக்கு வருகை புரிந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு கேலிக்கூத்தான ஒன்று. தமிழக அரசு சார்பில் டாஸ்மார்க் விற்பனைகள் முதலிடம் பிடிக்கும் மாவட்ட ஆட்சியருக்கு பரிசுகள் வழங்கப்படும் நிலையில், மது ஒழிப்பு மாநாட்டிற்கு திமுகவை அழைப்பது மக்களை ஏமாற்றும் செயல். திமுக கூட்டணியில் ஆட்சியில் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக விடுதலை சிறுத்தைகள் நடத்தும் நாடகம் என்று தெரிவித்தார்.

துணை முதல்வர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட உள்ளதாக உள்ள பேச்சு குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த கருப்பு முருகானந்தம், திமுக என்பது கருணாநிதியின் குடும்ப சொத்து 90 வயதாகி நாற்காலியில் வந்த போதும் கருணாநிதி முதல்வர் பதவியை தனது மகன் மு க ஸ்டாலினுக்கு விட்டுக் கொடுக்கவில்லை ஆனால் இந்த கட்சியில் நிறைய சீனியர்கள் உள்ள நிலையில் தனக்கு பின் தங்கள் மகன் உதயநிதிக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக தனது காலத்திலேயே தனது மகனை முதலமைச்சராகி அழகு பார்க்க நினைக்கிறார் இதில் சொல்வதற்கு ஏதுமில்லை என்று தெரிவித்தார். நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை அவர் அரசியல் எப்படிப்பட்ட தன்மை வாய்ந்தது என்பது போகப் போக தெரியும் என்று தெரிவித்தார்.

What do you think?

மூதாட்டி இடம் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் 5 சவரன் செயினை பறித்து சென்றதால் பரபரப்பு

பாரத பிரதமர் நரேந்திர மோடியின்.ஆயுஸ்மான் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.