in

நான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை… ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை மும்தாஜ்


Watch – YouTube Click

நான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை… ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை மும்தாஜ்

‘மோனிஷா என் மோனோலிசா’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ்.

அதனைத் தொடர்ந்து மலபார் போலீஸ், குஷி உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டியவர் வாய்ப்பு குறையவே ஒரு சில பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ்..2 .வில் நுழைந்தவர் மீண்டும் ஒரு ரவுண்ட் தமிழில் வருவார் என்று நினைத்தார்கள் ரசிகர்கள் ஆனால் வந்த வேகத்திலேயே வெளியேறினார்.

சமீப காலமாக ஆன்மீக விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி வரும் மும்தாஜ் 43 வயதாகியும் தான் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நான் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்து விட்டேன் அதனால் மனம் வெறுத்து தற்பொழுது இறைவழியில் செல்கிறேன் என் மதம் பற்றி அறியாமல் நான் சினிமாவில் நடித்து தவறு செய்துவிட்டேன்.

நான் திருமணம் செய்து கொள்ளாதது பற்றி ஏகப்பட்ட வதந்திகள் வருகின்றது. …ஒரு நாள் திடீரென என் இடுப்பு பகுதியை அசைக்கவே முடியாத அளவிற்கு வலி இருந்தது, பல மருத்துவர்களை பார்த்தும் என்ன பிரச்சனை என சொல்ல முடியவில்லை.

எனக்கு 25 வயது இருக்கும் பொழுது ஆட்டோ இம்யூனிட்டி டிஸ் ஆர்டர் நோய் இருப்பது தெரிய வந்தது எலும்பின் ஜாயிண்ட் எல்லாம் கடுமையான வலியாக இருக்கும். மன அழுத்தத்தில் இருந்த என்னை என் குடும்பம் மற்றும் அல்லாத்தான். தான் கைப்பற்றினார்.

இதனால் திருமண வாழ்க்கையில் என்னால் ஈடுபட முடியாது அதனால் திருமணம் செய்து கொள்ளவில்லை மற்றவர்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பதை பார்க்கும்போது எனக்கும் அப்படி இருக்க வேண்டும் என்று தோணும் ஆனால் மனரீதியாக நான் இன்னும் அதற்கு தயாராகவில்லை என்பது தான் உண்மை.


Watch – YouTube Click

What do you think?

மருமகனுக்கு லிப்லாக் கொடுத்த ரோபோ ஷங்கர் மனைவி… சர்ச்சையான வரவேற்பு நிகழ்ச்சி

சட்டமன்ற உறுப்பினர் வாக்கு சேகரிப்பில் ரகளை ஈடுபட்ட போதை ஆசாமி