நமச்சிவாயம், ஏன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை
காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் டெபாசிட் வாங்க மாட்டார் என்று சொல்லும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், ஏன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியிலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி பாஜக -என் ஆர் காங்கிரஸ் ஆட்சி ஊழல் குறித்து வெளிப்படையாக தெரிவித்தும் யாரும் வாயை திறக்கவில்லை என்றும் புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்க, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஒப்புதல் அளித்து அந்த கோப்புக்கு முதல்வர் ரங்கசாமி ஒப்புதல் கொடுக்கவில்லை.
பின்பு ரங்கசாமியை மிரட்டி அந்த கோப்புக்கு ஒப்புதல் பெற்றார் என தெரிவித்தார். தற்போது நமச்சிவாயம் பாராளுமன்றத் தேர்தலில் நிற்பதால் மின்துறை ஊழியர்கள், பாஜக வேப்பாளர் நமச்சிவாயத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு பல தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளார்.
ஆனால் புதுச்சேரியில் தொழில் துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம் ஒரு தொழிற்சாலையும் கொண்டு வரவில்லை வேலைவாய்ப்பையும் பெருக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.
காவல்துறையால் புதுச்சேரியில் சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், முதல்வர் வீட்டின் அருகே கஞ்சா விற்கும் சூழ்நிலை அரங்கேறி இருக்கிறது.
போதை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார் என நாராயணசாமி கூறினார். புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், தனது தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை இலவச பொருட்களை வழங்கி வரும் அவர் பாராளுமன்றத் தேர்தலில் நமச்சிவாயத்திற்கு ஓட்டு போடவில்லை என்றால் இலவசப் பொருட்களை நிறுத்தி விடுவேன் என்று பயங்கரமாக மிரட்டுவதாகவும் இது தொடர்பாக தேர்தல் துறை அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் டெபாசிட் வாங்க மாட்டார் என்று சொல்லும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், ஏன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.