in

ஏன் இந்த வயதில் சம்பாரிக்க கூடாதா?


Watch – YouTube Click

ஏன் இந்த வயதில் சம்பாரிக்க கூடாதா?

 

திறமை இருந்தும் பல நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் திறமையும் அதிர்ஷ்டமும் கூடிய ஒரு சில நடிகர்கள் இன்னும் திரைத்துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒருவர் தான் இந்தி திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் அமிதாப்பச்சன். 81 வயதாகும் இவர் தற்போதும் சுறுசுறுப்பாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான கல்கி படத்தில் இந்த வயதிலும் இவரால் இவ்வளவு சுறுசுறுப்பாகவும் ஆத்மார்த்தமாகவும் நடிக்க முடியுமா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு அற்புதமாக நடித்திருந்தார்.

இந்தியை தாண்டி இவர் மற்ற மொழிகளிலும் நடித்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் தமிழிலும் வேட்டையின் விரைவில் வெளிவர இருக்கிறது.

இந்த வயதிலும் இவர் டிரஸ் எடுக்காமல் எல்லா மொழிகளிலும் சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டு இருப்பதை பார்த்து இவருக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அதற்கு கோபமாக பதில் அளித்துள்ள அமிதாபச்சன், இன்னும் ஏன் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று ஒவ்வொரு நாளும் என்னிடம் பலர் கேட்கிறார்கள் இதற்கு என்னிடம் பதில் இல்லை நான் என் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என் வேலையை செய்யும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது.

நீங்கள் என்னை அங்கீகரித்தாலும் அங்கீகரிக்காவிட்டாலும் அது உங்கள் இஷ்டம் பலர் அவர்கள் வியாபாரத்தை வளர்க்க இன்னும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நானும் அது போல் எனது சாம்ராஜ்யத்தை உருவாக்க உழைத்துக் கொண்டிருக்கின்றேன். இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.


Watch – YouTube Click

What do you think?

புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சனம் ஷெட்டி

சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய பி. சுசீலா