ஏன் மக்கள் எவ்வளவு கேவலமாக இருக்கிறார்கள் ….சீரியல் நடிகை தீபா கண்ணீர் போஸ்ட்
சின்னத்திரை நடிகை ஆன தீபா கண்ணீருடன் தனது வலை பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியுளார்.
அன்பே சிவம், அத்திப்பூக்கள் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சீரியல் நடிகை தீபா இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில் , கடந்த ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி என்ற சீரியல்களின் தயாரிப்பாளரான சாய் கணேஷ் பாபு என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகன் உண்டு….
இந்நிலையில் தான் வெளியிட்ட வீடியோவிற்கு விளக்கம் அளித்து கூறியதாவது …எனக்கு 17 வயதில் திருமணம் ஆகி அடுத்த வருடமே குழந்தை பிறந்து விட்டது.
என் திருமண வாழ்க்கை நான் நினைத்தபடி இல்லை 23 வயதிலேயே என் திருமண வாழ்க்கை முடிந்துவிட்டு விட்டது. அப்போ என் மகனுக்கு ஐந்து வயது தான் அவனை கையில் பிடித்துக் கொண்டு எங்கே போவது என்று தெரியாமல் நான் நடுரோட்டில் நின்னேன் அந்த நேரத்தில் நாம் எதுக்குடா வாழனும் என்ற எண்ணம் தான் மேல் நோக்கி இருந்தது.
என்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் கெட்டவர்களாகவே இருந்தனர். ஆனால் அந்த நேரத்தில் எனக்கு தைரியம் கொடுத்தது என் மகன்தான் அவனுக்காகத்தான் நான் இப்பொழுது வரை ஓடிக்கொண்டிருக்கிறேன்.
சினிமாவிற்கு வந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் நான் நல்ல கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த இடத்திற்கு நான் வர பட்ட கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும் ,, ஒரு பெண்னாக தனியாக பல பிரச்சினைகளை சமாளித்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதில் எவ்வளவு வேதனைகளும் வலிகளும் இருக்கும் என்பது மற்றவர்களுக்கு தெரியாது…
நானும் என் மகனும் சேர்ந்து நீச்சல் குளத்தில் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தேன் அதை பார்த்துவிட்டு பல மோசமான கமண்டுகளை போடுகிறார்கள்.
அதனை பார்க்கும் பொழுது நான் கலங்கி விட்டேன் இப்படி கூடவா மனுஷங்கல் இருப்பாங்க என்று தோன்றுகிறது என்று கண்ணீருடனும் வேதனையுடனும் தனது விளக்கத்தை முடித்தார்.
வாழ வேண்டும் என்று நினைபவர்கள் எந்த விமர்சனத்தையும் தூக்கி எறியும் தைரியம் வரவேண்டும்.