ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது ஏன்?.. சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த A.R.Rahuman
விரைவில் வெளியாகவிருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘லால் சலாம்’ படத்திற்கு இசையமைத்தவர் ஏ. ஆர். ரகுமான்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் சமீபத்தில் வெளியிட்ட நிலையில் விமர்சனத்துக்குள் உள்ளானது, திமிரி எழுடா என்ற பாடலை ஏ ஆர் ரகுமான் அவர்கள் ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த பாடல்களின் குரல்களை மீண்டும் நம் காதில் ஒலிக்கும் யுக்தியை கையாண்டார்.
அதாவது பாடகரான பம்பா பாக்கியா மற்றும் சாகுல் ஹமீத் ஆகியோரின் குரலை பயன்படுத்தி தான் இந்த பாடலை உருவாக்கினார். இதன் மூலம் மறைந்த பாடகர்களின் குரலில் பாடல்களை உருவாக்கி புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
2.0 என்ற படத்தில் இடம்பெற்ற புள்ளினங்காள் என்ற பாடலை பாடியவர் அதேபோல் சாகுல் ஹமீதும் காதலன் என்ற படத்தில் ‘ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி’ என்ற பாடலை பாடியவர்.
தங்களது வேலை பறிபோய் விடுமோ என்று பலரையும் புலம்ப வைத்துள்ள, செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ., தொழில்நுட்பம், அதுமட்டும் அல்லாமல் , ஏ ஐ தொழில்நுட்பத்தால் சமீப காலமாக சில தவறான வீடியோக்கள் வளைதளங்களில் உலாவி நடிகைகளின் தூக்கத்தை கெடுத்து படாத பாடு படுத்துகிறது.
இந்நிலையில் ஏ.ஆர். ரகுமான் இந்த தொழில்நுட்பத்தை கையாண்டு பாடல்களை உருவாக்கியது வலைத்தளங்களில் விமர்சனங்களை உண்டாக்கியது.
இதற்கு விளக்கம் அளித்த ஏ ஆர் ரகுமான் அவர்கள் பாடகர்கள் பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது குரலை பயன்படுத்த அவர்களின் குடும்பத்தாரிடம் அனுமதி பெற்ற பின்னரே நான் வெளியிட்டேன்.
மேலும் அதற்கான தகுந்த தொகையும் அவர்களிடம் நான் கொடுத்தேன் தொழில்நுட்பத்தை சரியான வழியில் பயன்படுத்தினால் தொல்லையோ அச்சுறுத்தலோ இல்லை என அவர் ஸ்டைலில் அமைதியாக அட்வைஸ் செய்துள்ளார்.
திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் மோசமான செயல்திறன் அல்லது தவறுகளுக்கு தங்கள் கருவிகளைக் குறை கூற மாட்டார்கள். அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் வேலைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள், அவர்களின் திறன்கள் மற்றும் நுட்பங்களை மேம்படுத்த முயற்சி செய்கிறார்கள்… ar ragman இவ்வழி சார்ந்தவர்.