பாராளுமன்றம் சென்று தயிர்சாதம் சாப்பிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதற்காக ஓட்டளிக்க வேண்டும்
புதுச்சேரி பிஜேபியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கடலூர் சாலை மரப்பாலம் சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கட்சியின் மாநில தலைவர் செல்வ கணபதி தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பிஜேபி தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பது குறித்து பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பாஜக வேட்பாளர் நமச்சிவாயம்…
இந்த தேர்தலில் பிஜேபிக்கு வாக்களிக்க கூடாது என்று நினைப்பவர்களை கூட நமக்கு வாக்களிக்க செய்ய வேண்டும், வெற்றி பெற்று விட்டோம் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை அதற்காக நாம் வீட்டில் போய் படுத்து விட கூடாது, நமது எண்ணம் நமது லட்சியம் எதிரணி வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்பதுதான் என்று குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டு காலத்தில் நரேந்திர மோடி செய்த சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சென்று வாக்குகளை சேகரிக்க வேண்டும் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாக தெரிவித்த நமச்சிவாயம்….
வாக்கு கேட்க செல்லும் இடங்களில் இளைஞர்களும் தாய்மார்களும் உற்சாகத்தோடு என்னை வரவேற்கிறார்கள் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது, 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வர உள்ளார் என்றார்.
எந்தவித பயனும் இல்லாமல் பிரயோஜனமும் இல்லாமல் பாராளுமன்றம் சென்று தயிர் சாதம் சாப்பிடும் ஒருவரை எதற்காக வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நமச்சிவாயம்….
எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால் அது மாநில வளர்ச்சியை பதினைந்து ஆண்டு காலம் பின்னோக்கி தள்ளிவிடும் என்பதையும் எடுத்துக் கூற வேண்டும் என்றார்.
அப்படி தப்பித்தவறி யாராவது எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டளித்தால் அது ஒவ்வொன்றும் செல்லாத ஓட்டு என்று தெரிவித்த நமச்சிவாயம்
உலகளாவிய தலைவராக பிரதமர் நரேந்திர மோடி வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றும் உலக தலைவர்கள் ஆலோசனை கேட்கும் தலைவராகவும் மோடி இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
பொதுமக்களின் எண்ணம் பொதுமக்களின் கோரிக்கைகள் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்றால் அதற்கு அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நாடாளுமன்ற வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து 15ஆம் தேதி ரோடு ஷோ நடைபெற உள்ளதாகவும் இதில் பாஜக தேசிய தலைவர் நட்டா கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.