ஏ ஆர் ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டது ஏன்?
பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மருத்துவமனையில் அனுமதி. இவரது மனைவி சாய்ரா பானு அண்மையில் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். தற்பொழுது ஏ ஆர் ரகுமானும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்களை கவலையில் ஆழ்தியது.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஞாயிற்றுக்கிழமை லண்டன்…னில்லிருந்து திரும்பிய உடனேயே, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் கழுத்து வலி காரணமாக சிறிது நேரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமான பரிசோதனைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்,” என்று டாக்டர் ஆர்.கே. வெங்கடாசலம் தெரிவித்தார், 58 வயதாகும் ஏ ஆர் ரகுமான் ஓய்வின்றி இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் படங்களுக்கு இடைவிடாமல் இசை அமைப்பதால் அவருக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டது.
பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை, தற்பொழுது நலமாக உள்ளார் என ஏ ஆர் ரகுமானின் மகன் அமின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் சாய்ராபானு தனது கணவருக்கு எதுவும் ஆகாது என்றும் அவருக்காக தான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன் என்றும் அறிக்கை வெளியிட்டார்.
யாரும் என்னை ஏ ஆர் ரகுமானின் முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் சட்டப்படி நாங்கள் இன்னும் பிரியவில்லை அதுவரை நாங்கள் கணவன் மனைவிதான் என்று குறிப்பிட்டுள்ளார்.