in

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை ஒரே நாளில் பாபநாசம் அணை 6 அடி உயர்ந்தது

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை ஒரே நாளில் பாபநாசம் அணை 6 அடி உயர்ந்தது

110 அடியை தொட்ட பாபநாசம் அணை

பாபநாசம் அணை பகுதியில் 44 மில்லி மீட்டர் மழைப்பொழிவு சேர்வலாறு அணை பகுதியில் 25 மில்லி மீட்டர் மழை பொழிவு

பாபநாசம் மணிக்கு வினாடிக்கு 5000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது

கை கொடுக்கும் மழையினால் விவசாயிகள் உற்சாகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் 143 அடி உயரமுள்ள பாபநாசம் அணையின் நீர்மட்டம் 111 அடியை தொட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையினால் திருநெல்வேலி மாவட்டத்தின் அணைகள் அனைத்திற்கும் வரும் தண்ணீர் அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணை பகுதியில் 44 மில்லி மீட்டர் மழைப்பொழிவும் சேர்வலாறு அணைப்பகுதியில் 25 மில்லிமீட்டர் மழை பொழிவும் மணிமுத்தாறு அணை பகுதியில் 8.8 மில்லி மீட்டர் மழை பொழிவும் பதிவானது குண்டாறு அணை பகுதியில் 66.6 மில்லி மீட்டர் மழை பொழிவும் பதிவாகியுள்ளது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.10 அடியை நெருங்குகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 129.20 அடியாக உள்ளது.

குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக பாபநாசம் அணையில் இருந்து 956 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை காலத்திலேயே பாபநாசம் அணையின் நீர்மட்டம் 110 அடியை தாண்டி உள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்தின் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கார் பருவ சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

What do you think?

உலக நன்மை வேண்டி உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரம் வரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் சாலையில் ஊர்ந்தபடி யாத்திரை:

நாமக்கல் மேலபேட்டபாளையம் அருள்மிகு காளியம்மனுக்கு ஆனி கடைசி ஞாயிறு சந்தனகாப்பு அலங்காரம்