காட்டு யானைகள் வழித்தடத்தை அடைக்கப்பட்டதால் ஊருக்குள் நுழைந்தது
மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒட்டியுள்ள அமாவராவதி அணை பகுதிகளில் பல்வேறு இடங்களில் யானைகளின் வழித்தடங்கள் அடைக்கப்பட்டதால் பழனி ஒட்டியுள்ள பகுதிகளுக்கு காட்டு யானைகள் பழனி பகுதியில் குடி பெயர்ந்துள்ளதால் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பழனி அருகே தென்னை மற்றும் மா மரங்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளதால் 200க்கும் மேற்பட்ட மரங்கள் சேதமாகி பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் ஒட்டி உள்ள பகுதிகளான சட்டப் பாறை ,கோம்பைப்பட்டி ,ராமபட்டினம்புதூர் ,கணக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மான், காட்டெருமை, யானைகள், சிறுத்தை அதிகம் வசித்து வருகின்றன. இந்நிலையில் சட்ட பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானையின் அச்சத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காட்டு யானை தாக்குதலில் பலியாகி உள்ளனர். மேலும் சிலருக்கு காட்டு யானை மற்றும் காட்டு எருமையின் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளனர் .
இந்நிலையில் கனகராஜ் என்பவரது விவசாய தோட்டத்தில் தென்னை, மரம், எலுமிச்சை உள்ளிட்ட வைத்து விவசாயம் செய்து வருகிறார் . இவர்களது தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளதால் காட்டு யானைகள் கூட்டமாக வந்து மா, தென்னை போன்றவற்றை நாசம் செய்து வருகிறது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மா மரங்களில் மாங்காய்கள் விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் இரண்டு நாட்களாக காட்டு யானைகள் தோட்டத்தில் புகுந்து மரங்களையும் காய்களையும் சேதப்படுத்தி உள்ளது .
இதனால் சுமார் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக யானைகளே வராத இந்த விவசாயப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானை, காட்டுஎருமை நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் உடுமலை அமராவதி அணை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகம் வசித்து வந்த காட்டு யானைகள் வழித்தடத்தை அடைக்கப்பட்டதால் ஊருக்குள் நுழைவதாகவும் இதற்கு வனத்துறை விவசாயிகளுக்கு காட்டு யானைகளின் நடமாட்டத்தில் இருந்து தங்களை காப்பதற்கு, மீண்டும் காட்டுயானைகளை அமராவதி அணையொட்டியுள்ள பகுதிகளுக்கு விரட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.