சிறுத்தையை பிடிப்பதற்கு வன உயிரின காப்பாளர் – அபிஷேக் டோமர் நடவடிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் நேற்று முன்தினம் இரவு சுமார் 6 அடி நீளம் உள்ள சிறுத்தை புலி உண்டு நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சிறுத்தை புலி கண்டறியப்பட்ட பகுதியில் வனத்துறையினர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று காலை மயிலாடுதுறை நகரின் அருகாமையில் ஆரோக்கியநாதபுரம் என்ற பகுதியில் சிறுத்தை புலி பார்த்ததாக நபர்கள் கொடுத்த தகவலின் பெயரில் அங்கு வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் சிறுத்தையின் கால் தரம் கண்டறியப்பட்டது தற்போது அந்த இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை, திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் மற்றும் மாவட்ட வன உயிரின காப்பாளரும் மாவட்ட வன அலுவலருமான அபிஷேக் டோமர் நேரில் பார்வையிட்டு வனத்துறையினருக்கு ஆலோசனை வழங்கினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியே மாவட்டம் வன அலுவலர் அபிஷேக் டோமர் வனத்துறையினருக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, சிறுத்தை இருக்கக்கூடிய இடம் மற்றும் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பளவு உள்ள பகுதியை ஆய்வு செய்து வருவதாகவும், இரவில் உடல் வெப்பத்தின் மூலம் கண்காணிக்க கூடிய கருவிகள் கேமராக்கள் ட்ரோன்கள் மூலம் இரவு நேரத்தில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்றும், சிறுத்தையை பிடிக்க ஆனைமலை உயிரின காப்பகத்தில் இருந்து அலுவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறுத்தையை பிடிப்பதற்கு உண்டான கருவிகள் மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது என்றும் இரவு நேரத்தில் பொதுமக்கள் தனியாக வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க வேண்டாம் என்றும் அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.