in

வன உயிரின வார விழா விழிப்புணர்வு ஓவியம் வரைந்த மாணவர்கள்

வன உயிரின வார விழா விழிப்புணர்வு ஓவியம் வரைந்த மாணவர்கள்

 

பாளையங்கோட்டையில் வன உயிரின வாரத்தையொட்டி நெல்லை மாவட்ட வனத்துறை மற்றும் சிவராம் கலைக்கூடம் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பாளையங் கோட்டை வன அலுவலர்கள் குடியிருப்பு வளாக சுற்றுச்சுவ ரில் விழிப்புணர்வு ஓவியங்களை மாணவர்கள் வரைந்தனர்.

இதில் 30-க்கும் மேற்பட்ட வன விலங்குகள், பறவைகள், இயற்கை நீரோடைகள், காடு பாதுகாப்பு குறித்த ஓவியங்களை தத்ரூபமாக வரைந்துள்ளனர்.

நிகழ்ச்சியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பககள இயக்குனர் மாரிமுத்து, மாவட்ட வன அலுவலர் முருகன், நெல்லை வனச்சரகர் சரவணகுமார், உயிரியியலாளர்கள் கந்தசாமி, ஸ்ரீதர், வனவர் கேசவன், சிவராம் கலைக்கூடம் ஆசிரியர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

மதுவிலக்கு மாநாடு என்பது மிகப்பெரிய நாடகம் நெல்லையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

சஞ்சீவ் திருமணதிற்கு ஆல்யா மானஸா வாழ்த்து