ஜனநாயகன், பராசக்தி ஒரே நாளில் மோதுகிறதா
தளபதி விஜய் கடைசியாக நடிக்கும் ஜனநாயகன் படத்தை ஹெச் வினோத் இயக்குகிறார், Pooja Hedge, பிரியாமணி, கௌதம் மேனன், பாபி தியோல், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. அதே நாளில் மற்றொரு முன்னணி நடிகரின் படமும் வெளியாகிறது சுதா கங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அதர்வா, ஜெயம் ரவி, ஸ்ரீலிலா உள்ளிட்டோர் நடிக்கும் பராசக்தி படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகிறது .
விஜய்யின் படமும் சிவகார்த்திகேயன் படமும் ஒரே நாளில் மோதுகிறது. ஆனால் சிவகார்த்திகேயனுக்கு இதில் உடன்பாடு இல்லையாம் விஜய்யின் படத்தோடு தனது படமும் ஒரே நாளில் வெளியாக கூடாது என்று கவனமாக இருப்பதால் ஜனநாயகன் படம் வெளிவதற்கு முன்பே பராசக்தி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.