100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் புகார் எழுந்துள்ள புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுமா? இல்லயா? என்பதை துணைநிலை ஆளுநர் வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்.
ஆளுநர் மாளிகை என்பது பஞ்சாயத்து செய்யும் மாளிகையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பகிரங்க குற்றச்சாட்டு.
புதுச்சேரி மாநிலத்தல் கடந்த 10 தேதி முதல்வர் தலைமையில் கேபினட் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட புதிய கொள்கை முடிவுகள் மற்றும் புதிய செயல் திட்டங்கள் குறித்து இதுவரை அரசு சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை கேபினட் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எதுவும் ரகசிய தஸ்தாவேஜீகள் அல்ல. அவை அனைத்தும் ஒப்பன் கோப்புகளா என்பதை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை. மத்திய அரசால் கூட்டப்படும் கேபினட் கூட்ட முடிவுகளும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளால் கூட்டப்படும் அமைச்சரவை முடிவுகளும் அடுத்த சில நிமிடங்களிலேயே பகிரங்கமாக வெளியிடப்படும். ஆனால், கடந்த கால திமுக. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போதும் தற்போது நடைபெறும் பிஜேபி, என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் கேபினட் முடிவுகள் வெளியிடப்படுவதில்லை. இதுபோன்ற செயல் ஏற்புடையதல்ல.
நம் மாநிலத்தை பொறுத்தவரை புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்கும் பிரச்சனை பூதாகாரமாக தினசரி உருவாக்கப்பட்டு வருகிறது.புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது அரசின் கொள்கை முடிவாகும். ஆம் எனில் அம்முடிவு எப்போது எடுக்கப்பட்டது? அரசின் இந்த கொள்கை முடிவிற்கு துணை நிலை ஆளுநர் முன்பே அனுமதி அளித்துள்ளாரா? ஓராண்டிற்கு முன்பு புதிய மதுபான தொழிற்சாலைகள் அமைக்க துணை நிலை ஆளுநரின் அனுமதியோடு அரசால் விண்ணப்பங்கள் பெறப்பட்டதா?
புதிய மதுபான தொழிற்சாலைகள் கொண்டுவருவது பிஜேபி, என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசின் கொள்கை முடிவு என்றால், அதை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.தற்போது காங்கிரஸ் கட்சியானது துணை நிலை ஆளுநரை சந்தித்து இப்பிரச்சனையில் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். ஊழலைப் பற்றி பேசும் தகுதி கடந்த கால திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு தகுதி இல்லை.
புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கும் பிரச்சனையில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் மதுபான தொழிற்சாலை உரிமம் வழங்கப்பட்டுள்ளது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெகுண்டு எழுந்து கேள்வி எழுப்பியுள்ளார், புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தமட்டில் திமுக என்பது ஆளும் கட்சியின் ஒர் அங்கம் என்பதை நாராயணசாமி மறந்து விட்டார்.
புதிய மதுபானம் தொழிற்சாலைகள் வழங்குவது சம்பந்தமாக துணை நிலை ஆளுநர் அவர்கள் வாய்மூடி மௌனம் காப்பது ஏற்புடையதல்ல. கடந்த சில நாட்களாகவே துணை நிலை ஆளுநர் மாளிகை என்பது பஞ்சாயத்து செய்யும் மாளிகையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுமா? இல்லயா? என்பதை ஏன் தெரியப்படுத்தாமல் மௌனம் சாதிக்கிறார். இவ்விஷயத்தில் தேசிய கட்சியான பிஜேபியின் முடிவு என்ன என்பதை பிஜேபி மூலம் துணைநிலை ஆளுநராக உள்ள நம் துணை நிலை ஆளுநர் தெரியப்படுத்த வேண்டியது அவரின் கடமை என கூறினார்…