in

இந்த கேள்வியை விஜய் ..யிடம் கேட்பீர்களா… பத்திரிக்கையாளரிடம் பொறிந்து தள்ளிய இயக்குனர் அமீர்

இந்த கேள்வியை விஜய் ..யிடம் கேட்பீர்களா… பத்திரிக்கையாளரிடம் பொறிந்து தள்ளிய இயக்குனர் அமீர்

போதைப்பொருள் கடத்தியதாக தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தம் இருப்பதாக இயக்குனர் அமீர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் சினிமா பிரபலங்கள் பலர் தற்பொழுது இயக்குனர் அமீருக்கு எதிராக திரும்பி இருகின்றனர்.

உயிர் தமிழுக்கு என்ற படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டு இயக்குனர் அமீர் பேசியபோது பத்திரிக்கையாளர்கள் சிலர் கேள்விகள் கேட்க கோபமானார் இயக்குனர் அமீர் .

ஒரு பத்திரிக்கையாளர் ஜாஃபர் சாதிக்..குக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது உங்களுக்கு சந்தேகம் வரவில்லையா என கேட்க இந்த கேள்வியை Lycaa நிறுவனத்திடம் போய் கேட்பீர்களா அந்த நிறுவனத்தின் பின்னணி பற்றி உங்களுக்கு தெரியுமா.

அவர்கள் ஏன் விஜய் படத்தை மட்டும் தொடர்ந்து எடுக்கிறார்கள் என்று கேள்வி கேட்பீர்களா அது மட்டும் இன்றி விஜயின் அரசியல் பிரவேசம் குறித்தும் ஆவேசமாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதனால் கொதித்து எழுந்த விஜய் ரசிகர்கள் சங்கம் விஜய்யை சீண்டியது தவறு என்றும் தளபதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்..ன்னும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொதித்து எழ … விஜய் ரசிகர்களிடம் எந்த ரியாக்ஷனும் காட்ட வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.

நமக்கென்று ஒரு காலம் வரும் அப்பொழுது பதில் அளி கொடுப்போம் என்று தன் ரசிகர்களின் கைகளை கட்டி போட்டு வைத்திருக்கிறார் விஜய் இருந்தாலும் ரசிகர்களின் மனசு ஆறாமல் அமீரை வளை தளத்தில் வச்சு செய்கின்றனர்.

What do you think?

மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் நடிகர் சிங்கம் புலி

Necklace அணிந்து வந்த அலப்பரை பண்ண நடிகர்