ஸ்ட்ரைக் உறுதி வாபஸ் … வாங்க முடியாது
நடிகர் தனுஷ் புதிய படங்ககளில் நடிக்க கட்டுப்பாடு விதிக்கபட்டு, நடிகர்களின் சம்பள பிரச்சனைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் நவம்பர் 1ஆம் தேதி முதல் படப்பிடிப்பு அனைத்தையும் ரத்து செய்து ஸ்ட்ரைக் செய்வதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் தயாரிப்பாளர்கள் சமரசம் செய்து கொள்ளவில்லை.
இது சம்மந்தமாக இயக்குனர் பேரரசு பேசியபோது… தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் செய்வது சாதாரண விஷயம் அல்ல இது இந்த துறையையே பாதிப்பது மட்டும் அல்ல எத்தனை பெரிய பிரச்சனைகளை இந்த ஸ்டிரைக் ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மிகப்பெரிய நிறுவனங்கள் தற்போது படம் எடுப்பதில்லை ஒரு சில தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் மட்டுமே நடிகர்கள் நடிப்பதால் மற்ற நிறுவனங்கள் பாதிப்படைகின்றது.
இதனை நடிகர்கள் கருத்தில் கொண்டால் தான் சினிமா துறை தழைக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த பிரச்சனையை சுமூகமாக முடிக்க எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இயக்குனர் பேரரசு கேட்டுள்ளார்.