in ,

நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து செயினை திருடி சென்ற பெண் கைது

நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து செயினை திருடி சென்ற பெண்ணை கைது செய்த அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் ஸ்ரீ குமரன் ஜுவல்லரி என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது இந்த நகை கடையில் வழக்கம் போல் கடையைத் திறந்து கடை செயல்பட்டு வந்துள்ளது. இதை அடுத்து கடையை இரவு மூடும் நேரத்தில் நகைகளை சரிபார்த்த பொழுது 24 கிராம் எடை கொண்ட தங்க நகை மாயமாக போனது தெரியவந்தது இதை அடுத்து அங்கிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் நகை வாங்க வந்த 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 3 பவுன் கொண்ட 90 ஆயிரம் மதிப்பிலான செயினை திருடி சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி நகை கடையில் கிளை மேலாளராக பணிபுரியும் சுனில் என்பவர் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நகையை திருடியது அருப்புக்கோட்டை சாய் நகரை சார்ந்த வேலம்மாள் என்பது தெரியவந்தது. இதை எடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நகையை மீட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What do you think?

108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீ பாண்டவர் தூதுவ பெருமாள் ர கருட சேவை

நத்தம் அருகே வெடி வெடிக்கும் ஆர்வத்தில் ஊதுபத்தியை பட்டாசு இருந்த அறையில் வைத்து சென்ற சிறுவர்கள். வெடித்து சிதறிய பட்டாசுகளால் பரபரப்பு