வேன் மோதியதில் பெண் படுகாயம். அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி அவசரகால ஊர்தி கிடைக்காமல் 30 நிமிடம் சாலையில் படுகாயத்துடன் தவித்த பெண்மணி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை ரயில்வே சுரங்கப்பாதை அருகே பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது முன்னாள் வந்து கொண்டிருந்த டூரிஸ்ட் வேன், பெண்மணி ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த அந்த பெண்மணி படுகாயம் அடைந்தார்.
இதை கண்ட அப்பகுதி மக்கள் 108 அவசர கால உறுதிக்கு தகவல் தெரிவித்தனர் எனினும் திருப்பரங்குன்றம் பெரியார் பேருந்து நிலையம், தோப்பூர், காளவாசல் உள்ளிட்ட வாகனங்கள் மற்ற கேசுகளில் இருந்ததால், சிந்தாமணியில் இருந்து 108 வாகனம் வரவேண்டிய நிலை இருந்தது. இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சாலையிலேயே அவர் கிடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையே அவர் மீது டூரிஸ்ட் வேன் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை கொடுக்கின்றனர்.