in

மண்ணுலகை மட்டுமல்ல விண்ணுலகை ஆளக்கூடியவர்கள் பெண்கள்

மண்ணுலகை மட்டுமல்ல விண்ணுலகை ஆளக்கூடியவர்கள் பெண்கள்

 

மண்ணுலகை மட்டுமல்ல விண்ணுலகை ஆளக்கூடியவர்கள் பெண்கள் என ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை மாணவிகளுக்கு வழங்கிய கூடங்குளம் அணு மின் நிலைய மனித வள மேம்பாட்டு குழு துணை மேலாளர் விஜயராணி தெரிவித்துள்ளார்.

நெல்லை காந்திநகர் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் 39 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அரங்கத்தில் வைத்து கல்லூரி முதல்வர் முனைவர் சுமிதா தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கூடங்குளம் அணு மின்நிலைய மனிதவள மேம்பாட்டு குழு துணை மேலாளர் விஜயராணி கலந்து கொண்டு 1277 மாணவிகளுக்கு பட்டங்களையும் 40 மாணவிகளுக்கு பதக்கங்களையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மாணவிகள் மத்தியில் அவர் பட்டமளிப்பு விழா உரையாற்றிப் பேசுகையில் பெண்களுக்கு கல்வி என்பது மிக அவசியமாகும். கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கு இணங்க கல்வி என்பது உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் பட்டம்பெற்றுள்ள நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முதல் படியை தாண்டியுள்ளேர்கள், சங்க காலம் முதல் இன்றுவரை எத்தனையோ பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.

 

உதாரணமாக 8 நாட்கள் பயணமாக விண்வெளி நிலையத்திற்கு சென்ற பெண் சுனித்தாவில்லியம்ஸ், 286 நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்துள்ளார் மண்ணுலகை மட்டுமல்ல விண்ணுலகை ஆளக்கூடியவர்கள் பெண்கள், எனவே பட்டம் பெற்றுள்ள நீங்கள் இந்த நாட்டிற்காக மிகப்பெரிய சாதனையை செய்யவேண்டும் அதற்கான லட்சியத்தோடு உங்கள் பயணம் அமையட்டும் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் , பெற்றோர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

தேனியில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல் துறையினர் விழிப்புணர்வு

வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருப்பனந்தாள் காவல்துறை ஆய்வாளர் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்