நாகையில் கிராமப்புற பெண்களும் பயனடையும் வகையில் மகளிர் திட்டம் சார்பில் பாலின வள மையம் திறந்து வைத்து பெண்களுக்கு ஐந்து லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் நாகப்பட்டினம் சார்பில் பாலின பாகுபாடு, பாலினம் தொடர்பான பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்வு காண்பது குறிந்த செயல்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும், பாலின சமத்துவம், குழந்தைகள் திருமணம், குடும்ப வன்முறை ஆகியவற்றால் தனி நபர் மற்றும் சமூகம் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு உரிமைகள் மருத்துவம், உளவியல், சட்டம். தங்குமிடம், மறுவாழ்வு மற்றும் பிற ஆலோசனை ஆதரவு போன்றவற்றை கிராமப்புற பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு கிடைக்கும் வகையில் நாகை மாவட்டத்தில் பாலின வள மையங்கள் கீழ்வேளுர், கீழையூர், தலைஞாயிறு ஆகிய 3 வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் தொடங்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக கீழ்வேளூர் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் வானவில் பாலின வள மையத்தை மகளிர் திட்ட இயக்குனர் முருகேசன் திறந்து வைத்து மகளிர் குழுக்களை ஊக்குவிக்கும் விதமாக பத்து நபர்களுக்கு 5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தொடர்ந்து பாலின வன்முறைகளை அடக்குவது தொடர்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் உதவித் திட்ட அலுவலர் ராஜ்குமார், இந்திராணி, வட்டார இயக்க மேலாளர் ராஜகோபால் மற்றும் வட்டார ஒருங்கினைப்பாளர்கள், மகளிர் குழுக்கள் கலந்து கொண்டனர்.