in

நீதிமன்றத்திற்குள் போராட்டம் நடத்திய பெண்கள், வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

நீதிமன்றத்திற்குள் போராட்டம் நடத்திய பெண்கள், வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

 

திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சவுக்கு சங்கருக்கு செருப்பு மற்றும் துடைப்பத்தை வீசி பெண்கள் போராட்டம் – நீதிமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு.

சவுக்கு சங்கர் இன்று மதியம் திருச்சி மகிளா உரிமையியல் மூன்றாவது மாவட்ட நீதிமன்றத்தில் கோயம்புத்தூர் சிறையில் இருந்து பெண் போலீஸ் பாதுகாப்புடன் வேனில் அழைத்து வரப்பட்டார்.

நீதிமன்ற வாயிலுக்குள் வேன் வந்து நின்ற போது சவுக்கு சங்கரை இறங்கிய பொழுது 25க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் பதாகைகளை வைத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு உள்ளேயே சங்கருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது வழக்கறிஞர் சிலர் எப்படி இவர்களுக்கு நீதிமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது என்பதை எதிர்ப்பு தெரிவித்தனர். சிறிது நேரம் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.

மீண்டும் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக வேனில் ஏற்றப்பட்ட பொழுது அங்கு இருந்த பெண்கள் திருநெல்வேலி காரன் ஒழிக. நாங்கள் சுயமாக வந்து பொதுமக்களாக போராடுகிறோம் என்று பெண்கள் குரல் எழுப்பினர்.

பெண்களுக்கு எதிராக பேசிய சவுக்கு சங்கரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்பொழுது வழக்கறிஞர் ஒருவர் காவல் நிலையங்களில் அதிகமாக பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் அங்கெல்லாம் சென்று போராடாமல் இங்கு வந்து போராடுகிறீர்களே என வழக்கறிஞர் எதிர் கேள்வி கேட்ட பொழுது பெண்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மாலை நீதிமன்ற த்திலிருந்து மீண்டும் திருச்சி லால்குடி கிளை சிறைக்கு சவுக்கு சங்கரை அழைத்துச் செல்ல போலீசார் தயாராகினர். அதற்கு முன்னதாக காலையிலேயே வழக்கறிஞர்கள் பெண்கள் உள்ளே எப்படி போராட்டம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள் என கேள்வி எழுப்பியதால் நீதிமன்ற நுழைவாயில் இல்லாமல் மாற்று வழியாக அந்த பெண்கள் உள்ளே துடைப்பம் மற்றும் காலணிகளை கொண்டு வந்து நீதிமன்றத்திற்குள் நடந்து செல்லும் காட்சிகள் காண முடிந்தது.

நீதிமன்ற வாயிலே விட்டு சவுக்கு சங்கர் லால்குடி கிளைச் சிறைக்கு அழைத்து செல்லும் பொழுது பிரதான வாயிலுக்கு முன்னதாக 25க்கும் மேற்பட்ட பெண்கள் அவரது வாகனத்தை நோக்கி காலணிகளை தூக்கி காண்பித்தும் துடைப்பத்தை வீசியும் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற வாயிலுக்கு முன்னதாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

What do you think?

மதுரை கூடல் நகர் திருக்கோவில் கொடியேற்றத்துடன் தொடங்கிய கூடலழகர் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா

கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி மற்றும் கொடைக்கானல் கோடை விழா