மதுவுக்கு எதிராகவும் வளர்ச்சிக்காக ஒன்றிணைவோம் பெண்கள் விழிப்புணர்வு பேரணி
மதுவுக்கு எதிராகவும் வளர்ச்சிக்காக ஒன்றிணைவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விழிப்புணர்வு பேரணி. மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தானம் அறக்கட்டளை சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்கள் வளர்ச்சிக்காக ஒன்றிணைவோம் மதுவை ஒழிப்போம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவுரி திடலில் இருந்து வாக்கத்தான் என்ற விழிப்புணர்வு பேரணியை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் வளர்ச்சிக்காக ஒன்றிணைவோம் மதுவை ஒழிப்போம் வறுமையை விரட்டி அடிப்போம் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பிய படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், கடைத்தெரு, பெருமாள்கோவில் தெரு, உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து பேரணியாக வந்தடைந்தனர்.
தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் வேளாண்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர் ரவி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீன்வளத்துறை கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த வல்லுநர்கள் கிராமப்புற பெண்கள் காளான் வளர்ப்பு, கால்நடைகள் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காய்கறி தோட்டம் அமைப்பது சுய தொழில் செய்து எவ்வாறு பொருள் ஈட்டுவது என்பது குறித்த சுயதொழில் தொடங்குவது குறித்த பயிற்சிகளை அளித்தனர்.