பெண்களை இழிவுபடுத்தாதிர்கள் மகளிர் ஆணையம் எச்சரிக்கை
தெலுங்கு சினிமா மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் தற்பொழுது எல்லா படத்திலும் ஒரு ஐட்டம் சாங் கட்டாயம் இடம்பெறுகிறது.
சமீபத்தில் வெளியான Robinhood படத்தில் Adhi Dha Surprisu என்ற பாடலுக்கு ஷர்மா போட்ட கவர்ச்சி ஆட்டம் அனைவரையும் திக்கு முக்காட வைத்துள்ளது ..
2K கிட்ஸ் இந்த பாடலை திரும்பத் திரும்ப இணையத்தில் கேட்டு வருகின்றனர். படு கவர்ச்சியாக இந்த படத்தில் அவர் போட்ட நடனத்திற்கு தெலுங்கானா மகளிர் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக காட்டப்படுவது சரியல்ல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் இந்த விஷயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், மீறி நடந்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.