in

மகளிர் சுய உதவிக் குழு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


Watch – YouTube Click

மகளிர் சுய உதவிக் குழு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் மகளிர் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை கை அதிகரித்து உள்ளது, தற்போது 4 லட்சத்து48 ஆயிரத்து 460 குழுக்கள் உள்ளது.

இந்த குழுக்களுக்கு முதல்வர் 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து வழங்கப்பட்டு வருவதாக நெல்லையில் நடந்த விழாவில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதனிடையே 8 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் சாதிச் சான்றிதழ் கிடைத்துள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு, மதி மின்வாகனங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டார். நிகழ்வு தொடங்கியதும் கரூரில் நடந்த நிகழ்வில் மகளிர் சுய உதவிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கடன் வழங்கி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.

இந்த நிகழ்வு முடிந்ததும் நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா நடைபெற்றது. இதில் சபாநாகர் அப்பாவு 1491 பயனாளிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் 4 கோடியே 80 லட்சத்து 52 ஆயிரத்து 877 ரூபாய் மதிப்பிலும் மகளிர் திட்டத்தின் மூலம் 582 பேருக்கு 53 கோடி ரூபாய் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் பேசுகையில் பங்காளதேஷத்தை சேர்ந்த தொழில் அதிபர் முகமதுயூனஸ் என்பவர் பெண் ஒருவர் பிச்சை எடுத்து ஆப்பிள் வியபாரம் செய்து குடும்பத்திற்கு பொருளாதாரம் ஈட்டும் நிலையை பார்த்து பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் அதற்கு அவர்களுக்கு சுய தொழில் வேண்டும் என ஐநா சபை வரை கொண்டு சென்றார்.

ஆனால் உலகத்திலேயே இந்தியாவில் தமிழகத்தில்தான் பெண்கள் சுய முன்னேற்றத்திற்காக மகளிர் சுய உதவி குழுக்களை தொடங்கி பெண்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அதன்பின்பு மகளிருக்கு கோடிக்கணக்கில் சுழல் நிதி வழங்கப்பட்டு பெண்கள் முன்னேற்றம் அடைந்த நிலையில் அப்போது 1 லட்சத்து 83 ஆயிரம் குழுகள் இருந்தது கடந்த 10 ஆண்டுகளில் சுய உதவிக்குளுக்கள் எண்ணிக்கை குறைந்தது.

தற்போது திமுக அரசு பொறுப்பேற்ற பின் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 48 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளது . தமிழக முதல்வர் இந்த குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்பட்டு வருகிறது நெல்லையில் நடந்த விழாவில் 53 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது , தந்தை பெரியார், காமராஜர், அண்ணா , கலைஞர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வருகிறார் என தெரிவித்தார்.

மேலும் இந்த விழாவில் புதிரை வண்ணான் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் குழந்தைகள் கல்வி கற்கவே கஷ்டப்பட்ட நிலையில் அவர்கள் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் விண்ணப்பித்த நிலையில் சாதிச்சான்றிதழ் கிடைத்துள்ளதாக அந்த குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், துணை மேயர் ராஜூ, ஒன்றிய செயலாளர்கள் ஜோசப்பெல்சி, ஆரோக்கிய எட்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

டாக்டர்கள் ஈகோவை கைவிடவேண்டும்

புதுச்சேரியில் கிராம மக்கள் நடத்திய போராட்டம்