லோகேஷ் கனகராஜ் இனி டைரக்ட் பண்ண மாட்டாரா???
லோகேஷ் கனகராஜ் சுருதிஹாசனுடன் இணைந்து ‘இனிமேல்’ என்ற ஆல்பத்தில் நடித்தார்கள்.
இவர்கள் இருவரும் காதலிப்பது பின்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது போன்ற கருத்தை மையமாக வைத்து இந்த ஆல்பம் உருவானது.
பாடல் வரிகளை கமலஹாசன் எழுத சுருதிஹாசன் இசை அமைத்துள்ளார். முதல் முறையாக நடிகராகி இருக்கிறார் லோகேஷ். அதை குறித்து மீடியாவில் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது என்னிடம் நடிக்கும் படி சுருதிஹாசன் கேட்டதும் எனக்கு வியப்பாக இருந்தது.
மேலும் கமலஹாசன் சார் பின்னணி குரல் கொடுக்கும் பொழுது எனக்கு சிலிர்ப்பாக இருந்தது.
நடிக்கும் பொழுது பயத்தோடும் பதட்டதொடும் நடித்தேன் இந்த பாடலில் நான் நடித்ததால் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் தலைவர் 177 படத்தை கைவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முற்றிலும் அது பொய் ரஜினி படத்தை முடித்த பிறகு கைதி 2 படப்பிடிப்பை நான் தொடங்குவேன். சுருதிஹாசன் கூறும் போது எனக்கு காதல் பாடல்கள் மீது எப்பொழுதுமே ஈர்ப்பு உண்டு.
லோகேஷ் கனகராஜின் தோற்றம் இனிமேல் ஆல்பத்திற்கு சரியாக இருப்பதால் அவரை நான் தேர்வு செய்தேன்.
காதலில் இருக்கும் நிறை குறைகளை இந்த பாடலில் நான் கூறியிருக்கிறேன் .. “இனிமேல்” என்கின்ற இந்தப் பாடலை ஆங்கிலத்தில் முதலில் எழுதினேன்… ஆனால் உறவுகளுக்குள் நிகழும் Ups And Downs பற்றி சொல்ல வேண்டும் என்றால் தமிழில் சொன்னால் தான் அழகாக இருக்கும் என்று என் அப்பா எழுத தொடங்கினார்.
இந்த கதைக்கு அன்னியோனியமாக நடித்தால்தான் நான்றாக இருக்கும் மற்றபடி இருவருக்குள்ளும் எந்த உறவும் இல்லை தயவுசெய்து மீடியா தவறாக வதந்திகளை பரப்பாதீர்கள் என்று ஸ்ருதிஹாசன் கேட்டுள்ளார்.