லாவோஸ், கம்போடியாவில் வேலையா ? எச்சரிக்கை தேவை
லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வழிகாட்டுதல்களை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக லாவோஸ் மற்றும் கம்போடியா நாட்டிற்கு செல்லும் இந்தியர்கள் ஏமாற்றப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போலி ஏஜெண்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் இதன் காரணமாக பல மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். எனவே தான் இந்த அறிவுரையை அரசு வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “கம்போடியா அல்லது தெற்காசிய நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக செல்லும் அனைத்து இந்தியர்களும் கவனமாக செல்லுங்கள் போலி ஏஜெண்டுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவிலும் போலி ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். லாவோஸ், கம்போடியா நாட்டில் உள்ள ஏஜெண்டுகள் இந்தியாவில் உள்ள ஏஜெண்டுகளுடன் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை கவர்ந்திழுக்கிறார்கள். கம்போடியாவில் வேலைக்குச் செல்லும் எவரும், இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் மட்டுமே செல்ல செய்ய வேண்டும்.
வேலை தேடுவோர் இந்திய தூதரகமான புனோம் பென்னை cons.phnompenh@mea.gov.in மற்றும் yisa.phnompenh@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் அணுகலாம். லாவோஸ் நாட்டில் டிஜிட்டல் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் உள்ளிட்ட வேலைகளுக்கு இந்தியர்களை அழைத்து வந்து லாவோஸுக்கு வந்த பிறகு கூலித் தொழிலாளிகளாக வேலை செய்ய வைக்கிறார்கள். மேலும் சட்டவிரோத வேலைகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.