உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பயிற்சிப்பட்டறை
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த குருக்கத்தியில் தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது.
இக்கல்லூரியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு நீர்பெரு விழா 2024 மற்றும் கடலோர பகுதிகளுக்கேற்ற நவீன வேளாண் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி பட்டறை நடைப்பெற்றது.
கல்லூரி முதல்வர் ரவி தலைமையில் நடைப்பெற்ற விழாவில் மகளிர் சுய உதவிக்குழு பண்ணை மகளிர் மற்றும் முன்னோடி விவசாயிகளுக்கு உவர் நிலத்தடி நீர் , மற்றும் களர் உவர் நிலம் கொண்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடலோர பகுதிக்கேற்ற குழாய் மூலம் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம், நேரடி நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள், விலை நிலங்கள் அருகே பண்ணை குட்டைகள் அமைத்து மழை நீரை சேகரித்து அதன் மூலம் சாகுபடி செய்வது, மாடிகளில் தோட்டம் அமைத்து குறைந்த நீரில் காய்கறிகள் சாகுபடி செய்வது.
இளம் சிகப்பு நிறம் கொண்ட மெத்தேலோ பாக்டீரியாக்களை பயன்படுத்தி குறைந்த நீரைக் கொண்டு சாகுபடி செய்வது குறித்த பல்வேறு உயரிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர்.
இதில் தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய செயற்பொறியாளர் முருகேசன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பழனிச்சாமி, தானம் வயலக கண்மாய் அறக்கட்டளை முதன்மை செயல் அலுவலர் வெங்கடேசன், தானம் அறக்கட்டளை மூத்த அணித் தலைவர் இளவரசி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், பாலசுப்ரணியன், தாமோதரன், இணை பேராசிரியர் அனுராதா ஆகியோர் பங்கேற்றனர்.