in

30 நொடிகளில் 30 பரதநாட்டிய முத்திரைகளை சொல்லி உலக சாதனை

30 நொடிகளில் 30 பரதநாட்டிய முத்திரைகளை சொல்லி உலக சாதனை

 

வேடசந்தூரில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒற்றை கையில் 30 நொடிகளில் 30 பரதநாட்டிய முத்திரைகளை சொல்லி உலக சாதனை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கலைஞர் நகரை சேர்ந்த மோகன் காந்தி, கவியரசி என்ற தம்பதியினரின் மகள் நிலானி 7வயது. இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

மேலும் நிலானி வேடசந்தூரில் உள்ள பரதநாட்டிய வகுப்பில் பரதம் பயின்று வருகிறார்.

இந்த நிலையில் நிலானி ஒற்றை கையில் 30 பரதநாட்டிய முத்திரைகளை 30 வினாடிக்குள் சொல்லுவதற்கு கடும் பயிற்சி மேற்கொண்டார்.

நிலானி கடும் பயிற்சிக்குப் பிறகு 30 வினாடிகளில் பதாகம், திரிபதாகம், அத்தப்பதாகம், கத்தரி முகம், மயூரம், அர்த்தச் சந்திரன் உள்ளிட்ட 30 பரதநாட்டிய முத்திரைகளை சொல்லி உலக சாதனை படைத்தார்.

இந்த உலக சாதனை வேர்ல்ட் வைட் (WorldWide) என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

மேலும் உலக சாதனை படைத்த மாணவியை நேரில் அழைத்து சட்டமன்ற மதிப்பு கூட்டு தலைவரும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான காந்திராஜன் பாராட்டி ஊக்க பரிசு வழங்கினார்.

What do you think?

திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் ஆலயம் மாசி மாத சுவாதி நட்சத்திரத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

OTT…யில் வெளியாகும் ‘Vidamuyarchi’