நாகை அருகே கபிலர் குறிஞ்சிப்பாட்டில் கூறிய 99 மலர்களின் பெயர்களை 37வினாடிகளில் கூறி இரண்டாம் வகுப்பு மாணவி உலக சாதனை செய்து அசத்தல். மாவட்ட ஆட்சியர் பாராட்டு
பத்துப்பாட்டு எனும் சங்க நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப் பாட்டு. கபிலர் என்னும் புலவர் பாடிய இந்தப் பாட்டில் 99 பூக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை அடுத்த அகரஒரத்தூர் ஊராட்சி வேர்க்குடியை சேர்ந்தவர் ரயில்வேயில் பணிபுரியும் ராஜா – பிரியா தம்பதியினரின் ஆறு வயதான 2 வகுப்பு பயிலும் மகிழினி கபிலர் குறிஞ்சிப்பாட்டில் கூறிய 99 குறிஞ்சி மலர்களின் பெயர்களை 37 வினாடிகளில் கூறி ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனைபுரிந்துள்ளார் அவருக்கு பாராட்டு சான்றிதழும் கேடயங்களும் வழங்கி அங்கீகரித்துள்ளது இந்த நிலையில் சாதனை புரிந்த மாணவியை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பாராட்டினார் சாதனை புரிந்த இந்த மாணவிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுதலை தெரிவித்தனர்