in

அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க உலக சிட்டுக்குருவி தினம்

அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க உலக சிட்டுக்குருவி தினம்

 

அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்கும் முயற்சியாக நெல்லையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிட்டு குருவி கூடுகளை பள்ளி மாணவர்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

சுற்றுச்சூழலின் அங்கமாக உள்ள சிட்டுக்குருவி இனம் அழிவதை தடுக்கும் வகையில் வீட்டில் ஒரு குருவி கூடு என்ற அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க உலக சிட்டுக்குருவி தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 20 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தை அனுசரிக்கப்படுவதன் மூலம் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைவதை தடுக்கவும் மக்கள் மத்தியில் சிட்டுக்குருவிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுவருகிறது.

உலக சிட்டுக்குருவி தினத்தினை முன்னிட்டு நெல்லையில் சமூக மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையினர் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் வகையில் வீட்டுக்கு ஒரு குருவி கூடு என்ற திட்டத்தினை அறிமுகம் செய்து பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள்,பொதுமக்களுக்கு சிட்டுக்குருவி கூடுகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

மேலும் பொது இடங்கள் மற்றும் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்ட இடங்களில் 500 மீட்டருக்கு ஒரு கூடு என்ற வகையில் நெல்லை மாநகர் பகுதியில் முதற்கட்டமாக 100 கூடுகளையும் அவர்கள் வைத்து வருகின்றனர்.

இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் சுற்றுச்சூழலின் அங்கமாக இருக்கும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வழிவகை செய்யும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முயற்சி மூலம் சிட்டுக்குருவி இனத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரிதும் உதவும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

What do you think?

வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருப்பனந்தாள் காவல்துறை ஆய்வாளர் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மே மாதம் 72 ஆவது உலக அழகி போட்டி நடைபெற இருக்கிறது