in

செஞ்சி சாணக்கியா மெட்ரிக் பள்ளியில் உலக யோகா தின நிகழ்ச்சி


Watch – YouTube Click

செஞ்சி சாணக்கியா மெட்ரிக் பள்ளியில் உலக யோகா தின நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள சாணக்கியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் சேகர் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் கலந்து கொண்டு யோகாசனத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

செஞ்சி மனவளக்கலை மன்றம் சார்பில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் செஞ்சி மனவளக்கலை மன்ற பேராசிரியர் பாலு, துணை பேராசிரியர் சங்கர், மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், முதுகலை ஆசிரியர் சப்ரூன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், முதுகலை ஆசிரியர் யாஸ்மின் நன்றி கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கான மாயூரம் வழக்கறிஞர்கள் தேர்தல் முடிவுகள்

திருச்சுழி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி