in

திண்டுக்கல் சீரடி சாய்பாபா ஆலயத்தில் சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு

திண்டுக்கல் சீரடி சாய்பாபா ஆலயத்தில் சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு

 

திண்டுக்கல் சீரடி சாய்பாபா ஆலயத்தில் 50க்கும் மேற்பட்ட மும்மதத்தைச் சேர்ந்தவர்கள் சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு

திண்டுக்கல் நாகல் நகர் பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என மும்மதத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து பாபாவிற்கு சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் ஆரத்தி நடைபெற்றது.

தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் அருட்பிரசாதமாக சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் ஏராளமான சாய் பக்தர்கள் கலந்து கொண்டனர் பொங்கல் விழாவினை திண்டுக்கல் தொழிலதிபர் ராஜேஷ் அவர்கள் சூடம் ஏற்றி வைத்துசமத்துவ பொங்கல்விழாவினை தொடங்கி வைத்தார்.

What do you think?

தொடர் விடுமுறை காரணமாக குவிந்த பக்தர்கள் கூட்டத்தில் உண்டியல் நிரம்பியது

சட்டவிரோதமாக பதிக்க வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்