நடிகர்களுக்கு அட்வைஸ் செய்த யாமி கௌதம்
யாமி கௌதம் நடிகர் நடிகைகளுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
நடிகர், நடிகைகளின் சொந்த வாழ்க்கை ரசிகர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. தாங்கள் நடிக்கும் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் பதிந்திருந்தால் போதும் சொந்த வாழ்க்கையை மையப்படுத்தி அல்ல.
நடிகர்கள் சொந்த வாழ்க்கையை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் தங்கள் வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு விஷயத்தையும் தற்போது சமூகவலைதளத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அவர்கள் சாப்பிடுவதில் ஆரம்பித்து ஓய்வு நேரங்களில் தங்கள் வாழ்க்கையை எப்படி தருகிறார்கள் என்பது வரை ஒவ்வொரு விஷயத்தையும் சமூக வலைதளத்திலும் பதிவிட்டு வருகின்றனர்.
நமது சொந்த வாழ்க்கையில் நடைபெரும் விஷயங்கள் சமூகத்திற்கு தேவை இல்லை நம்மை பற்றி பொதுமக்கலூக்கு தெரியாமல் இருந்தால் தான் கதாபாத்திரங்களோடு இணைவார்கள் நம்மை திரையில் பார்க்கும் பொழுது நமது சொந்த வாழ்க்கை அவர்களது நினைவில் வரக்கூடாது.