ஆலம்பூண்டி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி,ஸ்ரீ ரங்கபூபதி கல்லூரி கல்வி நிறுவனத்தின் சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீரங்கபூபதி கல்லூரி கல்வி நிறுவனம் சார்பாக சர்வதேச யோக தினம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் யோகா தினத்தை முன்னிட்டு சூரிய நமஸ்கரம், பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்தனர்.
ஸ்ரீ ரங்கபூபதி கல்லூரி நிறுவனத்தின் செயலாளர் வழக்கறிஞர் ஆர்.பி.ஸ்ரீபதி பேசுகையில் இந்தியாவின் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறுவது போல யோகா பயிற்சி அனைவருக்கும் ஒரு முக்கியமான ஒன்றாகும்.
மேலும் யோகா பயிற்சி செய்வதால் மன அமைதியை ஏற்படுத்துக் கப்படுகிறது, வாழ்வியல் முறையில் உடல் முன்னேற்றத்திற்கு மாற்றம் ஏற்படும், மனம் சார்ந்த பிரச்சினைகள், உடல் சுவாச கோளாறு பிரச்சனைகள் சரி செய்வதற்காகவே யோகா பயிற்சி மிக சிறந்த பயிற்சியாக விளங்கி வருகிறது.
யோகா பயிற்சி வாழ்வில் முன்னேற்றங்கள் வாழ்வில் முறை மாற்றங்களை உருவாக்குகிறது எனவே கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் வாரத்தில் ஒரு முறையாவது யோகா பயிற்சியில் ஈடுபட வேண்டும் என எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியில் உடற்கல்வி தலைமை ஆசிரியர்கள் காசிநாதன், விஜயலட்சுமி, கோமதி, சைலாஜா, சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.