பரதநாட்டியத்துடன் யோகாவை கலந்து புதிய முறையில் யோகாசன கலை நிகழ்ச்சி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பரதநாட்டியத்துடன் யோகாவை கலந்து புதிய முறையில் யோகாசன கலை நிகழ்ச்சியில் ஈடுபட்ட மாணவ மாணவிகள், 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரே இடத்தில் யோகாசனம் செய்தனர்.
இன்று சர்வதேச பத்தாவது ஆண்டு யோகாசன தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் யோகாசன நிகழ்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே சித்தர் காட்டில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரே இடத்தில் யோகாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை காவல்துறை சமூக நீதிக்கான டிஎஸ்பி A.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு யோகசனத்தின் பெருமைகள் குறித்து எடுத்துரைத்தார்.
பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சூரிய நமஸ்காரம் தனுராசனம் வஜ்ராசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்தனர். தொடர்ந்து மாணவிகள் பரதநாட்டியத்துடன் யோகாசனத்தை செய்து நடத்திய கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.