டைரக்டர் ஆவதற்கு அனுபவம் தேவை இல்லை … பணம் இருந்தால் போதும்…கூலாக பதில் சொன்ன டைரக்டர்
காசு கையில் இருந்தால் போதும் டைரக்டர் ஆகிவிடலாம் என்று புதிதாக சினிமா துறையில் நுழைந்த டைரக்டர் ஒருவர் திமிராக அளித்துள்ள பேட்டி தற்பொழுது சர்ச்சையாகி உள்ளது.
பைக் ரைடரான TTF வாசனை வைத்து மஞ்சள் வீரன் என்ற படத்தை அறிமுக இயக்குனர் செல்லம் எடுத்தார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அந்தப் படம் தற்பொழுது என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை.
TTF வாசனும் வீலிங் செய்து ஆக்சிடென்ட் ஆகி கைது செய்யப்பட்டு தற்பொழுது ஜாமினில் வெளியாகி உள்ளார். அதற்குள் இயக்குனர் செல்லம் டிடிஎஃப் வாசனை வைத்து தற்பொழுது இன்னொரு படத்தையும் இயக்க உள்ளாராம்..
TTF வாசகனுக்கு நான்கு கோடி சம்பளமாக கொடுத்து இருக்கிறேன் என்றும் அந்த இயக்குனர் கூறியிருக்கிறார் .படத்தின் மொத்த பட்ஜெட்டே ஐந்து கோடி இருக்கும் நிலையில் அவருக்கு மட்டும் நான்கு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
அதன்பிறகு அந்த படத்தின் தயாரிப்பாளரே நான் தான் என்று இயக்குனர் செல்லம் கூறினார். இயக்குனருக்கு ஏன் இவ்வளவு சம்பளம் கொடுத்தீர்கள் என்று நிருபர்கள் கேட்ட பொழுதுTTF வாசனைக்கு நான்கு கோடி சம்பளம் கொடுக்கும் பொழுது ஆடி மாசத்தில் என் ஊரில் கூழ் ஊற்றினார்கள் அதற்காக நான் போய்விட்டேன் என்று பொய் சொன்னார்.
பின்னர் நிருபர்கள் உங்களுக்கு குறும்படம் ஏதாவது எடுத்த அனுபவும் இருக்கிறதா என்று கேட்டதற்கு ஒரு டைரக்டர் ஆவதற்கு அனுபவம் எல்லாம் தேவை இல்லை கையில் காசு இருந்தாலே போதும் என்று கூலாக பதில் அளித்தார்.
நான் மஞ்சள் வீரன் படத்தை கலை நயத்துடன் தான் எடுத்தேன் அடுத்த படத்தை நான் கமர்சியலாக எடுக்க போகின்றேன் என்று பொய்க்கு மேல் போய் அடித்துக் கொண்டு போனவரை மரித்து செய்தியாளர்கள் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேட்டனர் உடனே டைரக்டர் கல்யாணம் பண்ணி வந்த காசுல தான்பா இந்த படத்தை நான் எடுக்கிறேன் என்று வெட்கம் இல்லாமல் கூறினார்.
இப்படிப்பட்ட ஆட்கள் எல்லாம் படத்தை எடுத்தால் படம் எப்படி இருக்கும் இவர்களை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டுகொள்ளாத என்று பல கேள்விகளை செய்தியாளர்களும் ரசிகர்களும் கேட்கிறார்கள் வெறும் பொழுதுபோக்காகவும் பப்ளிசிட்டிக்காகவும் மட்டுமே படம் எடுக்கும் இவர்களை போன்றவர்கள் படம் எடுத்தால் படத்தின் தரம் எப்படி இருக்கும் இப்படி தரம் குறைந்த படத்தை எடுக்கும் டைரக்டர் படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்கவும் கூடாது தியேட்டரில் ரிலீஸ் செய்ய அனுமதி வழங்கக் கூடாது என்று ரசிகர்கள் கூறுகின்றார்கள்.