in

ஏழை எளிய மக்கள் 500 பேருக்கு புத்தாடை போர்வைகள் உணவு வழங்கிய இளைஞர்கள்

ஏழை எளிய மக்கள் 500 பேருக்கு புத்தாடை போர்வைகள் உணவு வழங்கிய இளைஞர்கள்

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்கள் 500 பேருக்கு புத்தாடை போர்வைகள் உணவு வழங்கிய இளைஞர்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதி மோகன் என்பவர் சாலை ஓரம் வசிக்கும் ஏழை எளியவர்கள் வீடேற்ற அனாதைகளுக்கு அவரது நண்பர்கள் உதவியுடன், பசியாற்றி உணவு வழங்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் 500 சாலையோரம் வசிக்கும் முதியவர்கள் ஏழைகளுக்கு புத்தாடைகள் போர்வைகள் உணவு வழங்கும் பணியை பாரதி மோகன் தனது நண்பர்கள் உதவியுடன் துவக்கி உள்ளார்.

சமூக வலைதளங்கள் மூலம் நண்பர்களிடம் உதவி பெற்று பாரதி மோகனும் அவரது நண்பர்கள் மயிலாடுதுறை குத்தாலம் தரங்கம்பாடி செம்பனார்கோயில் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஏழை எளியவருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்க பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

What do you think?

பதக்கங்களை பெற்ற மாணவ மாணவிகளை மேளதாளங்கள் முழங்க சாரட்டு வண்டியில் அழைத்து வந்து பாராட்டு

காவலர்களின் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு 36 குண்டுகள் முழங்க அனுசரிப்பு