கரூர் அருகே மாடுகள் மாலை தாண்டும் விழாவில் மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடியதால் இளைஞர்கள் உற்சாகம்
கரூர் அருகே மாடுகள் மாலை தாண்டும் விழாவில் மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடியதால் பரபரப்பு – இளைஞர்கள் உற்சாகம்.
கரூர் மாவட்டம், ஜெகதாபி ஊராட்சியில் உள்ள அய்யம்பாளையத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வருடம் தோறும் மாடுகள் மாலை தாண்டு்ம் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
கிராம மக்கள் தங்கள் வளர்க்கும் எருதுகளை தெய்வமாக மதித்து வருகின்றனர். பொதுவாக கிராம மக்கள் ஆரோக்கியமாக வாழவும், கிராமத்தில் விவசாயம் செழிக்கவும், நீர் ஆதாரம் பெருகவும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் செல்வ செழிப்போடு விளங்கவும், அவர்களது இஷ்ட தெய்வத்திற்கு வேண்டும் நிகழ்வாக மாடு மாலை தாண்டும் விழா கொண்டாடப்படுகிறது.
இன்றைய நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் மக்கள், தாங்கள் வளர்த்து வரும் எருதுகளை கோவில் முன்பு கொண்டு வந்து இறைவனிடம் ஆசி பெற்ற பிறகு, எல்லை தெய்வம் இருக்கும் இடம் வரை எருதுகளை நடக்க வைத்து அழைத்து செல்கின்றனர்.
பிறகு அங்கு பூஜை செய்த பிறகு எருதுகளை அவிழ்த்து விட்டு ஓட விட்டனர்.
இதில் முதலில் வரும் எருதுகளை வளர்த்து வரும் விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளை இஷ்ட தெய்வம் நிறைவேற்றி தரும் என்ற மரபின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில் சுமார் 200 எருதுகளும், எருதுகளை வளர்த்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களும், விவசாயிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாலை தாண்டு விழாவை சிறப்பித்தனர்.
மாடுகள் ஒருசேர மாலை தாண்டுவதற்காக சீறிப்பாய்ந்து பரபரப்புடன் சென்றதால் பார்வையாளர்கள் பரவசம் அடைந்தனர்.
இளைஞர்கள் எருதுகளை கட்டுப்படுத்த அதன் பின்னாலே உற்சாகத்துடன் ஓடி வந்தனர்.